நாடாளுமன்றம் எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்தி வைப்பு

நாடாளுமன்றம் எதிர்வரும் 12ம் திகதி (புதன் கிழமை) பிற்பகல் 01.00 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சி நிரலை மாற்றி தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் மாலை 5 மணி வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டமையினைத் தொடர்ந்தே நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எனினும் தொடர்ச்சியாக ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது.

இதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தரப்பினர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வினையும் தாங்கள் புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 20 செய்திகள் கீழே