நாடாளுமன்றத்தையும், நீதித்துறையையும் ஜனாதிபதி மதிக்க வேண்டும் – லக்ஸ்மன் கிரியெல்ல

நாடாளுமன்றத்தையும் நீதித்துறையையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதித்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர்- அமைச்சரவை இல்லை என சபாநாயகரான நீங்கள் கூறினீர்கள். அதையே இன்று நீதிமன்றமும் சொல்லியுள்ளது.

ஆனால் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொன்னாலும் பிரதமர் நியமனம் செய்யமாட்டேன் என்று ஜனாதிபதி சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும்.

நாடாளுமன்றத்தையும், நீதித்துறையையும் ஜனாதிபதி மதிக்க வேண்டும். நீங்கள் உரிய நடவடிக்கை எடுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 20 செய்திகள் கீழே