நடிகை வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நடிகர் விஜய்குமாருக்கு சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் சொந்தமாக பங்களா ஒன்று உள்ளது. விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன் அந்த பங்களாவில் படப்பிடிப்பு நடத்தினார்.

வனிதா விஜயகுமாரின் 2வது மனைவி மஞ்சுளாவுக்கு மகளாக பிறந்தவர். விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணு. இவர்களுக்கு நடிகர் அருண் விஜய் உள்பட 3 வாரிசுகள். வனிதாவின் தாயார் மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீதா, ஸ்ரீதேவி என 3 மகள்கள். பிரீதா இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீதேவி ஆந்திராவில் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

வனிதா படப்பிடிப்புக்கு பிறகும் அந்த வீட்டை காலி செய்யாததால் விஜயகுமார் மதுரவாயல் போலீசிலும், போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் புகார் செய்தார். போலீசார் தலையிட்டு, நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்களை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றினர்.

அப்போது வனிதாவின் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டதால், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். வனிதாவும் தனது தாயார் மறைவிற்கு பிறகு அவருக்கு சொந்தமான சொத்துக்களை விஜயகுமாரும், அவரது முதல் மனைவி மற்றும் மகன் அருண்விஜய் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் தெரிவித்து இருந்தார்.

இதனை நடிகர் விஜயகுமார், நடிகர் அருண் விஜய் ஆகியோர் மறுத்தனர். இந்தநிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு உச்சநீதிமன்றத்தில் வனிதா மனு தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது

மேலும் 20 செய்திகள் கீழே