முடியும் என்று மோது ….!

கண்ணுறக்கம் தொலைத்தேனோ கண்ணில் நீர் கொண்டாய் – அட
கவலையில் தோய்ந்தேன் தண்ணியில் மிதந்தாய் ..?
வாழ்க்கை ஒரு வட்டமடா வளர திட்டம் போடடா
வருவாய் வந்தாலே வையம் உன்னை தேடி வரும் ….

முடியும் என்று முன்னேறு முயற்சி கட்டு
முன்னே வந்த தடைகள் எல்லாம் சுக்கு நூறு …
எதிரி என வந்தவரும் தருவராடா தங்க தேரு
எழுந்து வான் ஏறும் தேடுதல் தட்டு ……

வான் கறுத்து நீர் பொழியும் மேகம் ஆவாய்
வலி மாறும் தங்கம் தடம் ஆவாய் ….
சிந்தையை தட்டி தகரா திட்டம் போடு
சீறும் வானூர்தி ஆகி பறக்கலாம் ……

கவலை சூடி அழுதென் கண்டாய் ..?
கால் கழுவி மாற்றான் ஏன் தொழுதாய் …?
முற்போக்கை முன்னே விரித்தே புயலாகு
முது கெலும்பு நூறாகி வீரனாகு …..

நாளை இந்த உலகு உன் காலடி தான்
நகைத்தவரும் உன் மகுடி தான் …
எல்லாம் நடந்திட எண்ணம் தட்டு
எதிரே வரும் சதிகளை முன்னே கூடு கட்டு ….!

– வன்னிமைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -01/12/2018

மேலும் 20 செய்திகள் கீழே