வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

Spread the love

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

ஆப்கானிஸ்தான் நாட்டின் இராணுவத்திற்கு சொந்தமான எம்ஜ-35’ ரக உலங்கு வானூர்தி ஒன்று
வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

இதில் அந்த அந்த விமானத்தை ஓட்டி சென்ற இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர் .


உலங்கு வானூர்தி இயந்திரகோளாறு காரணமாக வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக
இராணுவம் அறிவித்துள்ளது .

ஆனால் தலிபான்கள் தாக்குதலினால் இந்த உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என ஒரு தகவல் தெரிவிக்கிறது .

ஈராக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகளிற்கு ஆதரவு தரும் நாடுகள் மீதும் ,அந்த அமெரிக்கா இராணுவ நிலைகள் மீதும்

எமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்து வரும் நிலையில் இந்த உலங்கு வானூர்தி வீழ்ந்துள்ளமை சுட்டி காட்ட தக்கது

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

குறித்த விபத்து தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளனராம் ,ஆனால்

விசாரணை முடிவில் சுட்டு வீழ்த்த பட்டிருந்தால் அதனை ஏற்று மக்களுக்கு அறிவிக்க வா போகின்றனர் என்ன ..?

இதற்கு முன்னர் இடம்பெற்ற விமான விபத்துக்களின் பொழுதும் அவற்றை விபத்து என்ற சொல்லுக்குள்ளேயே

குறித்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு பதுங்கி கொண்டது ,உண்மை நிலவரத்தை அது இறுதிவரை தெரிவிக்கவில்லை .

ஆனால் தாலிபான்கள் உரிமை கோரி காணொளியுடன் தாம் சுட்டு வீழ்த்தியதாக உரிமை கூறியமை இங்கே சுட்டி காட்ட தக்கது

இராணுவ உலங்குவானூர்தி

Leave a Reply