பெண்ணை தாக்கிய வாலிபர்

டெல்லி உத்தம்நகர் பகுதில் உள்ள தனியார் கால் செண்டரில் பணியாற்றும் பெண் மீது வாலிபர் ஒருவர் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிராயுதபாணியாக இருக்கும் பெண்ணை வாலிபர், கால்களால் எட்டி உதைத்து தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த வீடியோ கடந்த 2-ம் தேதி பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், பெண்ணை தாக்கிய வாலிபர் டெல்லி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகன் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால், இந்த வீடியோவை பார்த்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பெண் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கை அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட வாலிபரை டெல்லி போலீசார் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் வாலிபரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்

மேலும் 20 செய்திகள் கீழே