10 வயது சிறுமியை கற்பழித்து பிளாட்பாரத்தில் வீசிய வாலிபர்

தலைநகர் டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகன் ரோகித் தோமர் நேற்று கற்பழிப்பு புகாரில் கைது செய்யப்பட்டார்.

இவர் டெல்லி உத்தம் நகரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு ஒரு பெண்ணை வரவழைத்து கற்பழித்தார். பின்னர் எட்டி உதைத்தும் கன்னத்தில் அறைந்தும் தலை முடியைப் பிடித்து இழுத்தும் அடித்து உதைத்தார்.

இந்த சித்ரவதை வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கவனத்துக்கு சென்றது. உடனடியாக அவர் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வாலிபர் ரோகித்தை கைது செய்தனர்.

டெல்லியில் இளம் பெண்ணை கற்பழித்து தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ரோகித் தாமர்.

இவர் டெல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் என்பது இன்னொரு அதிர்ச்சி தகவல் ஆகும். நேற்று அவர் கைது செய்யப்பட்ட போது மற்றொருவரை தாக்கும் வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்குப்பின் 10 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. கிழக்கு டெல்லியில் கொண்ட்லி என்ற இடத்தில் ஸ்மிருதிவன் பார்க் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி பெற்றோருடன் பிளாட்பாரத்தில் வசித்து வந்தாள்.

மயூர் லிகார் சிக்னலில் வாகனங்கள் நிற்கும்போது அவர்களிடம் பிச்சை எடுத்து வந்தாள். சம்பவத்தன்று இவள் உடல் முழுவதும் காயங்களுடன் பிளாட்பாரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். தாய் அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றாள். பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

மருத்துவமனையில் சிறுமி கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடல் முழுவதும் நகக்கீறல்களும் இருந்தது. டாக்டர்களே இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விசாரணையில் இறங்கினர். குடிபோதை வாலிபர் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபரை கைது செய்தனர். நள்ளிரவில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை முயற்சி, கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 2 நாட்களுக்கு பிறகுதான் நினைவு திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பிறகே வாக்கு மூலம் பெறப்படும் என்றும் தெரிவித்தனர்.

சிறுமியின் பெற்றோர் உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பிழைப்பு தேடி தாயும் மகளும் டெல்லி வந்தனர். காஸிப்பூர் மண்டி அருகில் சாலையோரம் தங்கி இருந்தனர்.

போலீஸ் விசாரணையில் கைதான வாலிபர் பெயர் மாணிக் சாம் என்றும் நள்ளிரவில் குடி போதையில் நடந்து வந்த போது சாலையோரம் தூங்கிய சிறுமியை பலவந்தமாக கற்பழித்ததாக தெரிய வந்தது.

மேலும் 20 செய்திகள் கீழே