நல்லூர் திருவிழாவில் பொருட்கள் தொலைத்தவர்களுக்கு யாழ் மாநகரசபை விடுத்துள்ள இனிப்பான செய்தி

நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யப் பெருந்­தி­ரு­வி­ழா­வின்­போது பக்­தர்­க­ளால் தவ­ற­வி­டப்­பட்ட பொருட்களை ஆதா­ரம் காட்டி மாந­கர சபை­யில் அலு­வ­லக நேரத்­தில் பெற்­றுக் கொள்ள முடி­யும் என்று யாழ்ப்­பா­ண மாந­கர சபை ஆணை­யா­ளர் த.ஜெய­சீ­லன் தெரி­வித்­தார்.

தவ­ற­வி­டப்­பட்ட தேசிய அடை­யாள அட்டை, திறப்­புக்­கள், கைய­டக்­கத் தொலை­பே­சி­கள், பணப்­பை­கள் மற்­றும் பெறு­ம­தி­யான பொருள்­கள் என்­பன யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் உற்­சவ காலப் பணி­ம­னை­யில் கண்டெடுத்தவர்களால் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.
எனினும் அந்­தப் பொருட்கள் இன்­று­வரை உரிமை கோரப்­ப­டாத நிலையில் உரியவர்கள் ஆதாரம் காட்டி பெற்றுக்கொள்ளமுடியும்.

Related Post