கிளிநொச்சியில் வளர்ந்துவரும் தெருக்காவாலிகள்-சினிமா பாணியில் சந்தையில் அட்டகாசம்

கிளி­நொச்சி பொதுச் சந்­தை­யில் நேற்று மாலை இரு குழுக்­கள் ஒன்­று­டன் ஒன்று மோதி அட்­டா­கா­சம் புரிந்­த­தால் சிறிது நேரம் அங்கு பெரும் பதற்­றம் நில­வி­யது. உருத்­தி­ர­பு­ரம் மற்­றும் பார­தி­பு­ரம் பகு­தி­க­ளைச் சேர்ந்த இரு இளை­ஞர் குழுக்­க­ளி­ டை­யி­லேயே இந்த மோதல் இடம்­பெற்­றது.

திரைப்­ப­டப் பாணி­யில் வாக­னம் ஒன்­றில் வந்து குதித்த பத்­திற்கும் மேற்­பட்ட இளை­ஞர்­க­ளைக் கொண்ட கும்­பல் ஆவே­ச­மா­கக் கத்­திக் கொண்­டும் சந்­தை­யில் இருந்­த­வர்­களை கத்தி, பொல்­லு­க­ளைக் காட்டி மிரட்­டிக்­கொண்­டும் மற்­றொரு குழு­வி­ன­ரைத் தேடி­யது. எதிர்ப்­பட்­ட­வர்­கள் எல்­லோ­ரை­யும் மிரட்­டிய குழு­வி­னர் சந்­தை­யில் இருந்­த­வர்­க­ளைத் தாக்­க­வும் செய்­த­னர்.

ஒரு கட்­டத்­தில் இரு குழுக்­க­ளும் சந்­தை­யில் நேருக்கு நேர் சந்­தித்து மோத­லில் ஈடு­பட்­டன. ஒரு­வரை ஒரு­வர் தாக்­கிக் கொண்­டது மட்­டு­மல்­லா­மல் சந்­தை­யில் வியா­பா­ரம் செய்­த­வர்­க­ளை­யும் வாடிக்­கை­யா­ளர்­க­ளை­யும் தாக்­கி­யுள்­ள­னர்.

பொலி­ஸா­ருக்கு உட­ன­டி­யா­கத் தக­வல் வழங்­கப்­பட்­ட­போ­தும் பொலி­ஸார் 35 நிமி­டங்­க­ளின் பின்­னரே சம்­பவ இடத்­துக்கு வந்­த­னர். அதற்­கி­டை­யில் மோத­லில் ஈடு­பட்ட குழு­வி­னர் தப்­பிச் சென்­றி­ருந்­த­னர். சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் இரு­வ­ரைக் கைது செய்­த­னர். அவர்­க­ளி­லல் ஒரு­வ­ருக்­குத் தலை­யில் கடு­யை­மான காயம் ஏற்­பட்­டி­ருந்­தது. அவர் கிளி­நொச்சி வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். சம்­ப­வம் தொடர்­பில் மேதி­லக விசா­ர­ணை­களை கிளி­நொச்சி பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

Related Post