காணாமலாக்கப்பட்ட அனைவரும் புலிகளே-மஹிந்தவின் பொது எதிரணியினர் தெரிவிப்பு

பாது­காப்­புப் படை­க­ளின் பிர­தானி மீதான குற்­றச்­சாட்­டில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் அனை­வ­ருமே விடு­த­லைப்­பு­லி­க­ளு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள். ஆயுத மோத­லின்­போதே புலி­கள் காணா­மல் போனார்­கள். அவர்­க­ளுக்­கா­கப் பாது­காப்பு படை­க­ளின் பிர­தா­னியைத் தண்­டிக்க நினைப்­பது கண்­டிக்­கத்­தக்­கது.

இவ்வாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சுயா­தீன அணி தெரி­வித்­துள்­ளது.

கடத்­தப்­பட்­ட­வர்­கள் மாண­வர்­களா அல்­லது வேறு யாருமா என்று தெரி­யாது. ஆனால் இந்­தக் காலத்­தில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூடு, கடத்­தல், கொலை, கைது­கள் என்று அனைத்­துமே விடு­த­லைப் புலி­க­ளு­டன் தொடர்­பு­பட்­டவை என­வும் அந்த அணி குறிப்­பிட்­டுள்­ளது.

அந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டிலான் பெரேரா தெரி­வித்­த­தா­வது:-
போர்க் குற்­றங்­கள் குறித்த நட­வ­டிக்­கை­க­ளில் இரா­ணு­வம் மீது கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை முன்­னெ­டுக்க வேண்­டும் என்று வடக்­கின் அர­சி­யல்­வா­தி­யான சிவா­ஜி­லிங்­கம் கூறி­யுள்­ளார்.

ஆனால் இரண்டு தினங்­க­ளுக்கு முன்­னர் அமெ­ரிக்க அரச தலை­வர் கூறி­யது என்ன?. அமெ­ரிக்க இரா­ணு­வம் மீது எந்­தப் பன்­னாட்டு நீதி­மன்­ற­மும் நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது என்று கூறி­விட்­டார். பன்­னாட்டு நீதி­மன்­றம் இறந்­து­விட்­டது என்­பதை தெரேசா மேயும் கூறி­விட்­டார்.

எமது நாட்­டி­லும் இரா­ணு­வம் மீதும், முன்­னாள் அரச தலை­வர் மகிந்த, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் மீதும் இரா­ணுவ குற்­றங்­களை சுமத்தி தண்­டிக்க முயற்­சித்த பன்­னாட்­டுத் தலை­வர்­களே இன்று அவர்­க­ளின் நாட்­டில் பன்­னாட்டு நீதி­மன்­றத்­துக்கு இட­மில்லை என்று கூறி­விட்­ட­னர்.

வடக்­கின் அர­சி­யல்­வா­தி­கள் இப்­போ­தா­வது இந்­தக் கருத்­துக்­க­ளைக் கைவிட்டு நல்­லி­ணக்­கப் பய­ணத்­துக்கு இடம் கொடுக்க வேண்­டும். மகிந்த ராஜ­பக்­ச­வுக்­கும் – இந்­தியத் தலைமை அமைச்­ச­ருக்­கும் இடை­யில் ஏற்­பட்ட சந்­திப்­பின் மூல­மாக இந்த நாட்­டில் மீண்­டும் மக்­க­ளாட்சி அரசு உரு­வா­கும் வாய்ப்­பும் நம்­பிக்­கை­யும் எழுந்­துள்­ளது. அதனை தமிழ் தலை­மை­கள் சீர­ழித்­து­விட வேண்­டாம் என்று கேட்­டுக்­கொள்­கின்­றோம் – என்­றார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எஸ்.பி.திசா­நா­யக தெரி­வித்­த­தா­வது:-
இந்த நாட்­டின் பாது­காப்பு அமைச்­சர் அரச தலை­ வர் மைத்­திரி. ஆனால் பாது­காப்பு படை­க­ளின் பிர­தானி மீது பல்­வேறு விமர்­ச­னங்­கள் எழு­கின்­றன. பாது­காப்பு படை­க­ளின் பிர­தா­னி­யைக் கைது செய்ய அரசு முயற்­சித்து வரு­கின்­றது. இதன் பின்­ன­ணி­யில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே உள்­ளார்.

காணா­மல் போனோர் அனை­வ­ரும் விடு­த­லைப் புலி­கள். போர்க் கால­கட்­டத்­தில் நாட்­டுக்கு எதி­ராக சதி செய்­த­வர்­கள். இப்­போது கடத்­தல் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­பட்ட பாது­காப்பு படை­யி­னர் மீது குறி வைக்­கப்­ப­டு­கின்­றது. இரா­ணு­வம் மீது தவ­றான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்த முயற்­சித்து வரு­கின்­ற­னர்.

புல­னாய்வு பிரி­வி­னர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து நாட்­டின் பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்த நட­வைக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது. குற்­றச்­சாட்டு முன்­வைக்­கும் நபர்­க­ளின் பின்­ன­ணியை ஆராய வேண்­டும்.

சரத் பொன்­சேகா யார் என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். இரா­ணு­வத்­தில் உள்ள பெண்­கள் விட­யத்­தில் அவர் நடந்து கொண்ட விட­யங்­கள், ஏனைய நட­வ­டிக்­கை­கள் குறித்து முறைப்­பா­டு­ கள் பல உள்­ளன. எமது இரா­ணு­வம் ஒழுக்­க­மான இரா­ணு­வ­மா­கும். மியன்­மார் போன்ற நாடு­களை போல எமது நட்டு இரா­ணு­வம் ஒரு­போ­தும் செயற்­பட்­ட­தில்லை.

அரச தலை­வர் இந்த செயற்­பா­ டு­கள், அர­சி­யல்­வா­தி­க­ளின் செயற்­பா­டு­கள் குறித்து கவ­னம் செலுத்த வேண்­டும். உட­ன­டி­யாக சரத் பொன்­சே­கா­வின் பத­வி­க­ளைப் பறித்து அமைச்­சுப்­ப­த­வி­யை­யும் பறிக்க வேண்­டும்.

அரச தலை­வ­ரின் பாது­காப்பு அமைச்­சின் பாது­காப்பு பிர­தா­னி­க­ளைத் தண்­டிக்க முயற்­சிப்­பது இறு­தி­யில் அரச தலை­வரை நெருக்­க­டிக்­குள் தள்­ளும் செயற்­பா­டாக அமை­யும்.- என்­றார்.

கேள்வி -– – வடக்­கில் பொது­மக்­கள் இரா­ணுவ தரப்­பி­டம் தஞ்­சம் புகுந்த நிலை­யில் காணா­மல் போயுள்­ள­னர் என்­றும் பல குற்­றச்­சாட்­டுக்­கள் உள்­ளன?. இதை இல்­லை­யெ­னக் கூறு­கின்­றீர்­களா?

பதில் – – அவ்­வா­றான சம்­ப­வங்­க­ளும் உள்­ளன. அதை நாம் மறுக்­க­வில்லை. எமக்­குத் தெரி­யாத பல சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றி­ருக்க முடி­யும். அவற்றை நாம் கண்­டிக்­கின்­றோம். வடக்­கில் பொது மக்­கள் தண்­டிக்­கப்­பட்­டால் அத­னைக் கண்­டிக்­கின்­றோம். ஆனால் போர்க் கால­கட்­டத்­தில் பொது­மக்­களை வலுக்­கட்­டா­ய­மாக பிர­பா­க­ரன் சிறைப்­பி­டித்து வைத்­தி­ருந்­தார்.

பிர­பா­க­ரன் மூல­மாக அதி­க­மாக கொல்­லப்­பட்­டது தமிழ் தலை­வர்­களே என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் குறித்த ஆணைக்­கு­ழு­வின் செயற்­பா­டு­களை நாம் ஆத­ரிக்­கின்­றோம். அப்­போது நாம் அர­சில் இருந்து முழு­மை­யாக ஆத­ரவு தெரி­வித்­தோம். பாது­காப்பு பிர­தானி மீதான குற்­றச்­சாட்­டில் காணா­மல் ஆக்­கப்­பட்ட அனை­வ­ருமே புலி­கள் என்­ப­தையே நாம் கூறு­கின்­றோம் -– என்­றார்.

Related Post