புலிகளின் முக்கிய தளபதி எழிலனின் தந்தையார் கிளிநொச்சியில் காலமானார்

தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்துறை முக்கியஸ்தராக எழிலனின் தற்தையாரான கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை இன்று அதிகாலை இயற்கை எய்தினார். திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராகவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவு பொறுப்பாளராகவும் எழிலனின் பொறுப்பு வகித்திருந்தார்.

இறுதி யுத்தத்தின் போது, 2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் எழிலன் சரணடைந்திருந்தார்.

அப்போது சரணடைந்தவர்கள் பற்றிய எந்த விபரத்தையும் அரசு வெளியிடவில்லை. மாறாக, யாருமே சரணடையவில்லையென்றே கூறி வருகிறது.

எழிலனின் மனைவியான, ஈழத்தமிழர் சுயாட்சி கழக பொதுச்செயலாளர் அனந்தி சசிதரன், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். எனினும், சரணடைந்தவர்கள் பற்றிய எந்த தகவலையும் அரசு வெளியிடவில்லை.

இராணுவத்திடம் சரணடைந்த தனது மகனின் நிலைமை என்னவென்பதை அறியாமலேயே, எழிலனின் தந்தையார் இன்று இயற்கை எய்தினார்.

மேலும் 20 செய்திகள் கீழே