வடமாகாண பாடசாலைகளில் புதிதாக காவலாளிகளை இணைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் கானப்படும் 130 காவலாளிகள் வெற்றிடத்தினையும் நிரப்புவதற்கான ஏற்பாட்டிற்காக வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள 12 வலயத்திலும் கானப்படும் பாடசாலைகளில் தற்போது 130 பேருக்கு காவலாளிகள் வெற்றிடம் கானப்படுகின்றது. இவ்வாறு கானப்படும் 130 வெற்றிடங்களையும் நிரப்புவதற்கான அனுமதியை தற்போது வடக்கு மாகாண கல்வி அமைச்சு பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.

இந்த நிலையில் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் குறித்த அனுமதி வழங்கும் சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண அமைச்சர் வாரிய அனுமதியுடனேயே குறித்த நியமனத்திற்கான நகர்வுகளை கல்வி அமைச்சு மேற்கொள்ள முடியும். இருப்பினும் தற்போதைய அமைச்சரவை தொடர்பான நெருக்கடி நீடிப்பதனால் அமைச்சரவை அனுமதி கிடைப்பதற்கான சந்தர்ப்பம் கிடையாது.

இருப்பினும் ஒக்டோபர் 25ம் திகதிக்குப் பின்பு குறித்த நியமனத்திற்கான அனுமதியை அமைச்சரவை அனுமதி இன்றி மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Post