இராணுவத்தினரால் கொல்லப்பட்ட விவசாயக்கல்லூரி மாணவர்களின் 12 ஆவது ஆண்டு நினைவு தினம்

இராணுவத்தினரின் தாக்குதலில் வவுனியா தாண்டிக்குளம் விவசாய கல்லூரி வளாகத்தில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 5 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு அஞ்சலி நிகழ்வு இன்று (19) தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலின்போது, இராணுவத்தினர் திருப்பித்தாக்கியதில் விவசாய கல்லூரி வளாகத்தில் கற்றல் நடவடிக்கை மேற்கொண்டிருந்த 5 மாணவர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்த 5 மாணவர்களின் நினைவு வருடா வருடம் விவசாய கல்லூரியில் இடம்பெற்று வருவதுடன் குறித்த மாணவர்களின் நினைவாக மரநடுகை, இரத்ததானம், தாகசாந்தி போன்ற சேவைகளை விவசாயக்கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் 12 ஆவது நினைவேந்தல் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (18) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரி அதிபர், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள், பழைய மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் 20 செய்திகள் கீழே