அநுராதபுரம் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி இன்றில் இருந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த அரசியல் கைதிகள் 8 பேரும், தண்டனை தீர்ப்பு வழங்கப்படாமல் 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்குறித்த் அரசியல்ல கைதிகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதமையை்கண்டித்து குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

மேலும் தமது விடுதலை குறித்து போதிய அக்கறை இன்றி செயற்படும் பிரதிநிதிகள் தமது விடுதலை தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தம்மை விடுவிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தமக்கு அரசிடம் இருந்து சரியாக பதில் வரும் வரை தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் குறித்த கைதிகள் ஏற்கனவே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

Related Post