மதில் சுவர் இடிந்து விழுந்து தலைமை ஆசிரியை உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சாஜன்வா வட்டத்துக்குட்பட்ட காசர்வால் பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இந்நிலையில், அந்தப் பள்ளியின் மதில் சுவர் இன்று இடிந்து விழுந்ததில் தலைமை ஆசிரியை சாரதா சிங்(55) படுகாயமடைந்தார்.

கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகும் இச்சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது

மேலும் 20 செய்திகள் கீழே