நீதி கேட்ட புலம்பெயர் தமிழரை தாக்கிவிட்டு ஆவா குழு என கதை கட்டிய சுண்ணாகம் பொலிசார்ர

வெளிநாட்டிலிருந்து வந்து தனது ஆதனத்தை மீட்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் மீது சுன்னாகம் பொலிசார் கொலைவெறி தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்

இன்று அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிசார் முற்படுத்தப்பட்டபோது, கறுப்புத்துணியால் முகத்தை மூடிக்கட்டியபடி வாளுடன் வந்தார் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், வெளிநாட்டு வாசியை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

பிரகாஸ் மொறிஸ் அருணாசலம் (61) என்பவர் பிரித்தானியா குடியுரிமையை கொண்டவர்.தற்போது நோர்வேயில் வசித்து வருகிறார்.

உடுவில் மகளிர் கல்லூரிக்கு அருகில் மிகப்பெறுமதியான பரம்பரை ஆதனங்களை கொண்டிருக்கிறார். நீண்டகாலமாக அவர் வெளிநாட்டில் இருப்பதால், உள்ளூர் கில்லாடிகள் சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அந்த காணியை விற்பனை செய்துள்ளனர்.

உடுவில் பிரதேசசபையில் தனது ஆதனத்திற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தார்.

அவர் தனது பரம்பரை ஆதனத்தை மீட்க தாயகம் திரும்பியுள்ளார். தனது பரம்பரை ஆதனம்தொடர்பான ஆவணங்களை உடுவில் பிரதேச சபையில் சமர்பித்து அவற்றுக்கான உரிமத்தைக் கோரியுள்ளார்.

அவரது கோரிக்கையை ஏற்பது தொடர்பில் உடுவில் பிரதேச சபையால், பகிரங்க அறிவித்தல் கோரப்பட்டது. எனினும் பகிரங்க அறிவித்தல் காலப் பகுதிக்குள் வேறு எவரும் அந்த ஆதனத்தை உரிமை கோரவில்லை. எனினும், தற்போது அந்த காணியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது யார் என்ற விபரத்தை வெளியிட உடுவில் பிரதேசசபை தயக்கம் காட்டி வருகிறது.

அதனால் தனது ஆதனத்துக்குச் சென்று அதனை பராமரிப்பதற்கு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தலைவர் அனுமதி பெற்றுள்ளார். அதற்கு அமைவாக தனது ஆதனத்துக்குள் அவர் நேற்று முன்தினம் சென்றுள்ளார். அவர் உரிமைகோரும் காணியை தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தரப்பினர் தனியார் பாதுகாப்பு நிறுவன காவலாளியை நியமித்துள்ளனர்.

பிரித்தானியா பிரஜை காணிக்குள் உள்நுழைய முயற்சித்தபோது, காவலாளி அவரை தடுத்துள்ளார். இதையும் மீறி அவர் உள்ளே நுழைய, காவலாளியால் சுன்னாகம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிசார், பிரித்தானியா பிரஜையை அள்ளிச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். மல்லாகம் துப்பாக்கிச்சூட்டில் குற்றம்சுமத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரும் தாக்குதலில் முக்கிய அங்கம் வகித்ததாக குற்றம்சுமத்தப்படுகிறது.

நேற்று அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது கழுத்தின் பின்பகுதி கடுமையான வீக்கமடைந்திருந்தது.

இந்த நிலையில், அவரை இன்று மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் பொலிசார் முற்படுத்தினர். முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கட்டியபடி, வாளுடன், ஆறு ரௌடிகளுடன் காணிக்குள் அத்துமீறி உள்நுழைந்தார் என பொலிசார் தரப்பில் குற்றம்சுமத்தப்பட்டது.

எனினும், பிரித்தானிய பிரஜை சார்பில் ஆஜரான சட்டத்தரணி அதை நிராகரித்தார்.

Related Post