ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியை அடுத்துள்ளது ஆவாரம்பட்டி. அங்குள்ள தனியார் நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த கமலா (வயது 31, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் வெளியூர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கமலா வீட்டின் குளியல் அறை ஜன்னலின் வெண்டி லேசன் வெளிப்புறமாக உள்ளது போல் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலா குளியல் அறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது வெண்டிலேசன் ஜன்னல் கண்ணாடியில் ஒரு கை தெரிந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போடவே, வெளியே நின்ற மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இந்தநிலையில் மர்ம நபரை பிடிப்பதற்காக கமலா வெளியே வந்து பார்த்த போது, ஒரு துண்டுச் சீட்டு கிடந்தது. அதில் ஆசிரியை கமலாவின் உடலை வர்ணித்தும், உடலில் எந்தெந்த இடங்களில் மச்சம் உள்ளது என்பதை குறிப்பிட்டும் இருந்தனர்.

மேலும் இதுதொடர்பாக யாரிடமாவது புகார் தெரிவித்தால் குளிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டல் விடுத்தும் எழுதப்பட்டிருந்தது.

இதனால் மிரண்டு போன ஆசிரியை, அவரது கணவரிடம் தெரிவிக்கவே, வையம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் அந்த மிரட்டல் கடிதத்தை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஆசிரியை வீட்டின் அருகே வசித்து வந்த மாணவன் மீது சந்தேகம் ஏற்படவே போலீசார் அந்த மாணவனின் நோட்டில் உள்ள கையெழுத்தையும், கடிதத்தில் எழுதப்பட்டிருந்த கையெழுத்தையும் வைத்து ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது இரண்டும் ஒன்றாக இருந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த மாணவர் வின்சென்ட் (16) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஆசிரியை குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்ததை ஒப்புக்கொண்டார். மேலும் வின்சென்ட் மட்டுமின்றி அவரது சகோதரர் ஜான்சன் (17) மற்றும் அவர்களது நண்பர் ராஜா (16) (மாணவர்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை திருட்டுத்தனமாக பார்த்து ரசித்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து மாணவர்கள் உள்பட 3 பேர் மீதும் 294 பி (ஆபாசமாக பேசுதல்), 354, 507, 509 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

மேலும் 3 மாணவர்களிடம் இருந்த செல்போன்களையும், ஆசிரியை சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ஜான்சன் அங்குள்ள பள்ளியில் 12-ம்வகுப்பும், வின்சென்ட் 11-ம்வகுப்பும் படித்து வந்தனர். ராஜா வேலை பார்த்து வந்துள்ளான். ஆசிரியை குளிப்பதை மாணவர்கள் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 20 செய்திகள் கீழே