சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வெடிப்புச் சம்பவம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தில் நேற்று வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வெடிப்பு இடம்பெற்ற சமயத்தில் மாணவர்கள் ஆய்வு கூடத்தில் இருந்துள்ளனர். எனினும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வெடிப்பு இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பலங்கொட பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Post