நாய் கூட சாப்பிடாது – விமானத்தில் வழங்கிய முந்திரியால் கொந்தளித்த மைத்திரி

சமீபத்தில் நேபாளத்தில் நடந்த பிம்ஸ்டெக் மாநாட்டை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு வழங்கப்பட்ட உணவில் இருந்த முந்திரி தரம் குறைந்ததாக இருந்துள்ளது. இதனை குறிப்பிட்டு, ‘விமானத்தில் வழங்கப்பட்ட முந்திரியை நாய் கூட சாப்பிடாது’ என அவர் கூறியிருந்தார்.

மேலும், விமான நிறுவனத்திற்கு முந்திரிகள் சப்ளை செய்தது யார்? என்ற விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து, இலங்கை விமானங்களில் முந்திரி கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. துபாயை சேர்ந்த சப்ளையருக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

Related Post