பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு படம் `கவச்சம்’. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பெலம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மெஹ்ரின் பிர்ஸாடா, காஜல் அகர்வால், இயக்குனர் ஸ்ரீனிவாச மமிலா, இசை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தாமான், ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, இந்த படத்தின் படபிடிப்பின் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து காஜல் அகர்வால் கூறினார். அப்போது ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு பற்றியும் காஜல் பேசினார். அப்போது சோட்டா நாயுடு, காஜல் அகர்வாலை அணைத்து முத்தமொன்று கொடுத்தார்.

இதையடுத்து அந்த நிகழ்வை சமாளிக்க முயன்ற காஜல், சான்ஸ் பீ டான்ஸ் என்று சமாளித்தார்.

இந்த சம்பவத்தையடுத்து, டுவிட்டரில் காஜல் அகர்வால் ரசிகர்கள் #BanChotaKNaidu என்ற ஹேஸ்டேகை உருவாக்கி சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்

மேலும் 20 செய்திகள் கீழே