அவசரப்படாமல் நிதானமாக செயல்படும் திரிஷா

96 படத்தின் வெற்றியை தொடர்ந்து கதை கேட்பதில் தீவிரமாக கவனம் செலுத்தி சிறந்த கதையை அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டு வருகிறார் திரிஷா. #Trisha

திரிஷா 13 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வருகிறார். 50 படங்களை தாண்டிவிட்ட திரிஷா கடந்த சில ஆண்டுகளாக சறுக்கலை சந்தித்தார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ‘96’ படம் அவருக்கு பெரிய வெற்றியை தந்துள்ளது. அதனுடன் தனது நீண்ட நாள் கனவான ரஜினியுடனும் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது கிடைத்திருக்கும் முன்னணி நடிகை அந்தஸ்தை காப்பாற்ற கதை கேட்கும்போது இனி தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். அவர் தன்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்பது இல்லை.

மாறாக தான் இதுவரை நடித்திராத கதாபாத்திரங்களாக பார்த்து தேர்வு செய்கிறார். அவசரப்படாமல் நிதானமாக படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களிடம் வாங்கிய நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறார்.

மேலும் 20 செய்திகள் கீழே