ஆப்பிரிக்க சுரங்கத்தில் கண்டு பிடிக்கப்பட்ட இளஞ்சிவப்பு வைரக்கல் 370 கோடிக்கு ஏலம்

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலம் நடைபெற்றது. இதை கிறிஸ்டி, ஏல மையம் நடத்தியது.

10 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் சுமார் ரூ.370 கோடிக்கு (50 மில்லியன் டாலர்) ஏலம் போனது. இது நீள் சதுரவடிவம் கொண்டது. பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறம் கொண்டது.

இந்த வைரத்தை பலர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். முடிவில் ஒருவர் அதிக விலை கொடுத்து வாங்கினார். அவரின் பெயரை வெளியிட கிறிஸ்டி ஏல மையம் மறுத்து விட்டது.

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1920-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் இது கண்டு பிடிக்கப்பட்டது. பொதுவாக வைரங்கள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். ஆனால் இந்த வைரம் அரிய இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது

மேலும் 20 செய்திகள் கீழே