பிறந்தநாளை கொண்டாட பிரதமர் மோடி வாரணாசி பயணம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு வரும் 17-ம் தேதி 67 வயது முடிந்து 68-வது வயது பிறக்கிறது. இதையொட்டி, 2 நாள் பயணமாக அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்கிறார்.

இதுதொடர்பாக, காசி பிராந்திய பாஜக தலைவர் மகேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா கூறுகையில், தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்லும் மோடி, அங்குள்ள பாரா லால்பூரில் 5 ஆயிரம் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மேலும், வாரணாசியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

மறுநாள் 18-ம் தேதி வாரணாசியின் புறநகர் குதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Related Post