நாலக்க டி சில்வாவிற்கு எதிரான விசாரணைகளுக்கு விசேட குழு நியமனம்

பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதி காவல்துறை மாஅதிபர் நாலக்க டி சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்காக காவல்துறை மாஅதிபரினால் விசேட காவல்துறை குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நாலக்க டி சில்வா சூழ்ச்சியான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக, ஊழலுக்கு எதிரான அணி நேற்றைய தினம் குற்றஞ்சுமத்தியிருந்தது,

கண்டியில் நேற்றைய தினம் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் காவல்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாகவும் அந்த அணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமார கூறியிருந்தார்.

நேற்றைய தினம் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போது, பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதி காவல்துறை மாஅதிபர் நாலக்க டி சில்வாவிற்கும், ஊழலுக்கு எதிரான அணியின் நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் நாமல் குமாரவிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்களும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post