நல்லூர் திருவிழாவில் பங்குபற்றிய பக்தர்களுக்கு யாழ் மாநகர சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்

நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யப் பெருந்­தி­ரு­வி­ழா­வின்­போது பக்­தர்­க­ளால் தவ­ற­வி­டப்­பட்ட பொருள்­கள்­களை ஆதா­ரம் காட்டி மாந­கர சபை­யில் அலு­வ­லக நேரத்­தில் பெற்­றுக் கொள்ள முடி­யும் என யாழ்ப்­பா­ண மாந­கர சபை ஆணை­யா­ளர் த.ஜெய­சீ­லன் தெரி­வித்­தார்.இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளதா­வது

தவ­ற­வி­டப்­பட்ட தேசிய அடை­யாள அட்டை, திறப்­புக்­கள், கைய­டக்­கத் தொலை­பே­சி­கள், பணப்­பை­கள் மற்­றும் பெறு­ம­தி­யான பொருள்­கள் என்­பன யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் உற்­சவ காலப் பணி­ம­னை­யில் ஒப்­ப­டைக்­கப்­பட்டுள்ளன.

அந்­தப் பொருள்­கள் இன்­று­வரை உரிமை கோரப்­ப­ட­வில்லை. பொருள்­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் மாந­கர சபை பணி­ய­கத்­தில், அலு­வ­லக நேரத்­தில் உரிய அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தி பெற்­றுக்­கொள்ள முடி­யும் எனவும் யாழ்ப்­பா­ண மாந­கர சபை ஆணை­யா­ளர் த.ஜெய­சீ­லன் மேலும் தெரிவித்துள்ளார்

Related Post