ஜனாதிபதி பிறப்பித்துள்ள கண்டிப்பான உத்தரவு

படைவீரர்களை அசௌகரியப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

படைவீரர்களை நெருக்கடிக்குள் ஆழ்த்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட கூடாது என ஜனாதிபதி பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவினை நேற்று முன்தினம் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பு முக்கியஸ்தர்களை அழைத்து பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டுப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர் மற்றும் அதன் பிரதானிகளை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையில் செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்

Related Post