செத்தவீட்டையும் விட்டுவைக்காத யாழ் திருடர்கள்-சடலத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை

வதிரிப் பகுதியில் இறந்தவரின் உடலில் இருந்த தங்க ஆபரணங்களை வீடு புகுந்த திருடர்கள் நேற்றுக்காலை 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பபெதியில் மூன்று தினங்களிற்கு முன்னர் காலம் சென்ற பெண்மணியின் உடல் வீட்டிலே வைஐஃகப்பட்டிருந்த்து. மரண வீட்டின் வேலைப் பழுகாரணமாகவும். உறவுகள் அதிகமாக கானப்பட்ட நிலையில் அனைவரும் மரண நிகழ்வில் மூழ்கியிருந்துள்ளனர். இந்த நேரம் கூட்டத்தோடு கூட்டமாக திருடனும் வீட்டுக்குள் உள் நுழைந்துள்ளான்.

இவ்வாறு உள் நுழைந்த திருடன் வீட்டில் பெட்டியில் இருந்த இறந்ந பெண்மணியின் கழுத்தில் இருந்த சங்கிலி , காப்பு , தோடு உள்ளிட்ட தங்க ஆபரணங்களை களவாடிச் சென்றுள்ளான். இதனை அறியாத விட்டார். காலையில் இறந்த பெண்மணியின் உடலை உற்று நோக்கியபோதே தங்க நகைகள் களவாடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதனையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் .

களவு , கொள்ளைகளிற்கு அப்பால் இறந்த உடலில் இருந்தும் களவாடும் ஈனப் பிறவிகளின் செயல் என குறித்த சம்பவம் தொடர்பில் அப் பபுதி மக்கள் விசணம் தெரிவிக்கின்றனர். –

மேலும் 20 செய்திகள் கீழே