ஒருவிநாடி கிடைத்தாலும் அந்த ஒரு நொடிப்பொழுதையும் மக்களுக்காகவே பயன்படுத்துவேன்

வன்செயல்கள் காரணமாக பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது புனர்வாழ்வு, புனரமைப்பு , வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துவிவகார அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுக்கு உரையாற்றுகையில்.

நாட்டின் வறுமையான மாவட்டங்களில் 25 ஆவது இடத்திலிருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவதே எமது பிரதான நோக்கமாகும்.

அந்தவகையில் கிடைக்கின்ற ஒவ்வொரு வினாடியையும் எமது மக்களுக்காகப் பயன்படுத்துவதே எமது நோக்கமாகும்.

சுயலாப அரசியலுக்கு எமது மக்கள் எதிர்காலத்தில் ஒருபோதும் இடங்கொடுக்கக் கூடாது.

மக்களாகிய நீங்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அக்கறையுடன் தீர்வு காண்பதற்குத் தயாராக இருக்கின்றார்கள்.

இந்த அரசு தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட புரளிகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இருக்காது.

வடக்கின் அபிவிருத்திக்கான எல்லை என்பது கிடையாது.

அபிவிருத்தியின் வரம்பு எல்லை வானமாகத்தான் இருக்க முடியும்.

எமது அமைச்சினூடாக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரது பூரண ஒத்துழைப்பு எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்காக நாம் சுயலாப அரசியலுக்காக மக்களுக்கான பணிகளை பயன்படுத்தப் போவதில்லை.

அந்தவகையில் சுயலாப அரசியலுக்கு எமது மக்கள் எதிர்காலத்திலும் இடம்கொடுத்துவிடக் கூடாது.

அவ்வாறு மக்கள் சுயலாப அரசியலுக்கு இடம்கொடுப்பார்களேயாயின் எதிர்காலத்தில் மேலும் பல துன்ப துயரங்களுக்கும் உள்ளாக வேண்டிவரும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த மாவட்ட மக்களை புறந்தள்ளிவிட்டு ஏனைய மாவட்ட மக்களுக்கு ஒருபோதும் நாம் முன்னுரிமை கொடுக்கப்போவதில்லை.

இருப்பதைப் பாதுகாத்துக்கொண்டு அதிலிருந்து முன்னேற்றம் காண்பதே எமது நோக்கமாகும்.
அந்தவகையில் நாட்டின் வறுமையான மாவட்டங்களில் 25 ஆவது இடத்திலிருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவதே எமது பிரதான நோக்கமாகும்.

இம் மாவட்டத்தின் பிரதானமாக நெற்செய்கை மற்றும் விவசாயம் தொடர்பில் நாம் அவதானித்து வருகின்ற அதேவேளையில் மூன்று போகமும் நெற் செய்கையை மேற்கொள்ளக் கூடிய வகையில் திட்டங்களை வகுத்து அவற்றைச் செயற்படுத்தவுள்ளோம்.

எனவே இவ்வாறான செயற்றிட்டங்களுக்கு மக்களாகிய உங்களது ஒத்துழைப்பும் ஒத்தாசையும் மிகவும் அவசியமாகும்.

Related Post