சீரற்ற கால நிலை காரணமாக வடக்கு மாகாணத்தில் இதுவரை 510 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 754 பேர் இடப்பெயர்வு

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக இதுவரை 510 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 754 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை ஏற்பட்ட மழை வீழ்ச்சியினால் அதிக பட்சமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 7 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 228 குடும்பங களைச் சேர்ந்த 836 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் இரு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர் என மாவட்டச் செயலகம் தெரிவித்தது.

இதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரையில் 210 குடும்பங்களைச் சேர்ந்த 647 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் முன்னெச்சரிக்கையாக 80 குடும்பங்களைச் 271 பேர் வேறு இடங்களிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் வடக்கில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதனால் மேலும் வெள்ளப்பாதிப்புக்கள் தொடரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டு ஆயத்தப்பணிகள் இடம்பெறுவமாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Post