கிளிநொச்சியில் நள்ளிரவு மக்கள் குடியிருப்புக்களை நோக்கி நகர்ந்த முதலை

கிளிநொச்சி குளத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்களை அச்சுறுத்திய முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு மக்கள் குடியிருப்புக்களை நோக்கி நகர்ந்த முதலை வீட்டில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட கோழிகளை பிடித்ததுடன் குடியிருப்பாளர்களையும் அச்சுறுத்தியுள்ளது.

முதலையை நீண்ட நேர முயற்சியின் பின் பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த இரு நாட்களாக கிளிநொச்சியில் பெய்த கடும் மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் முதலை குடியிருப்புக்குள் சென்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Post