டக்லஸ் தேவானந்தாவுக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு

யுத்தம் வன்செயலால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கான இழப்பீட்டுத்தொகை வழங்கும் நிகழ்வுக்கு வருகை தந்த புனர்வாழ்வு, புனரமைப்பு , வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துவிவகார அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலயத்திற்கு வருகை தந்த அமைச்சரை பொன்னாடை போர்த்து மாலை அணிவித்து வரவேற்றனர் .

இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன், ஈழமக்கள் ஐனநாய கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.தற்போது கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் யுத்தம் வன் செயலால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்கள் 300பேருக்கு அமைச்சர் தலைமையில் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Related Post