இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்

இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் முல்லை மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்!
யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களின்
ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள்
தற்போது முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வைபவரீதியாக ஆரம்பித்துள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட 320 பேருக்கு காசோலைகள் வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post