பயண கட்டணங்கள் 2 சதவீதத்தால் குறைக்கப்பட்டது

நேற்று நள்ளிரவு முதல் பேருந்து பயண கட்டணங்கள் 2 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.
டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக பேருந்து பயண கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க சகல பேருந்து சங்கங்களும் இணக்கம் வெளியிட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.பீ.ஹேமசந்ர தெரிவித்துள்ளார்.

எனினும், சொகுசு ரக மற்றும் அரை சொகுசு ரக பேருந்து பயண கட்டணங்களில் எந்தவித மாற்றமும் நிகழாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அதிவேக பாதைகளில் சேவையில் ஈடுபடும் பேருந்துக்களின் பயண கட்டணங்களை சீர்த்திருத்துவது தொடர்பில் எதிர்வரும் கலந்துரையாடலின் போது ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பேருந்து பயண கட்டணங்கள் தொடர்பான விபரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய 12 ரூபா என்ற ஆரம்ப கட்டணம், 15,20 மற்றும் 34 என்ற பேருந்து கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையும் நேற்று நள்ளிரவு முதல் பேருந்து பயண கட்டணங்களை 2சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Post