3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த வாலிபர்- உயிருக்கு போராடும் சிசு

உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் மில்லக் கிராமத்தில் திங்கட்கிழமை இரவு சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3 வயது மகள் பட்டாசு விபத்தில் பலத்த காயமடைந்தார். அவரது வாய் சிதைந்த நிலையில் அலறித் துடித்தாள். அவளது வாயில் ஒரு வாலிபர் பட்டாசு வைத்து வெடித்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவளது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் வாயில், அதே பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற வாலிபர் பட்டாசை வைத்து வெடிக்க செய்ததாக காவல்நிலையத்தில் அவளது தந்தை புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஹர்பாலை தேடி வருகின்றனர்.

குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Post