டெல்லியில் ரூ.200 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

பாகிஸ்தானிலிருந்து கடத்தப்படும் ஹெராயின் போதைப்பொருள், காஷ்மீர் மாநிலம் வழியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதையடுத்து, ஜம்மு அருகே உள்ள சுங்கச்சாவடியில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட அதிகாரிகள், ஆப்பிள் பழப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். குப்ராவா மாவட்டத்திலிருந்து ஹெராயின் கடத்தி வரப்படுவதாகவும், டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்

Related Post