முட்டாள் முத்தையா முரளிதரனின் கருத்தை வரவேற்பதாக கோத்தபாய ராஜபக்ச அறிவிப்பு

இந்த நாடு சிங்கள பௌத்த நாடு, ஜனநாயகத்தை விட மூன்று வேளை சாப்பாடுதான் முக்கியம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வரவேற்றுள்ளார். முரளிதரனின் கருத்துக்கள் தங்களை உத்வேகமூட்டுவதாக அவரைப் பாராட்டியுமுள்ளார்.

இதுதொடர்பில் கோத்தாபய ராஜபக்ச ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.

“அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்தில் முரளிதரனின் கருத்து அமைந்துள்ளது.
முரளிதரன் நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

“நாட்டில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிங்கள பௌத்தர்களாவர். எனவே இது சிங்களவர்களுக்குரிய நாடுதான். தமிழ் அரசியல்வாதிகள் ஜனநாயகம் குறித்தும் உரிமைகள் குறித்தும் பேசி வருகின்றனர். உண்மையில் தமிழ் மக்களுக்கு அடிப்படையாக அவை தேவைதானா என கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.

நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரசியல்வாதிகளிடம் கேட்பது ஜனநாயகத்தையோ அல்லது உரிமைகளையோ இல்லை. மூன்று வேளை உணவு உண்பதற்கும் தமது பிள்ளைகளிற்கு சிறந்த கல்வியை பெற்றுத்தருவதற்குமான பொருளாதார அபிவிருத்தியையுமே கேட்கின்றனர்” என முத்தையா முரளிதரன் நேற்றுமுன்தினம் பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தக்களிற்கு பெரும்பாலானவர்கள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post