கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சி அறிவியல்நகர்ப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

யுத்தம் நிறைவுற்ற பின் அறிவியல்நகர்ப் பகுதி வெடிபொருட்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியாக கையளிக்கப்பட்டது.

அந்த வகையில் குறித்த பகுதியில் யாழ் பல்கலைக்கழக வளாகம் இயங்கி வருகின்றது. தற்போது அப் பகுதியில் புதிய கட்டடம் ஒன்று நிர்மானிக்கப்பட்டு வருகின்றது. அதற்காக நேற்றைய தினம் நிலத்தினை தோண்டியபோது வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது கட்டடப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Related Post