நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி செயற்படுகின்றார் சபாநாயகர் – தயாசிறி குற்றச்சாட்டு

சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நேரத்தில் வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பது நாடாளுமன்ற விதிமுறைகளை முற்றிலும் மீறும் செயற்பாடாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச நாடுகளினதும், அமைப்புகளினதும் கைப்பொம்மையாக சபாநாயகர் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைக் காலமாக அவர் ஒரு சபாநாயகர் என்ற வரம்பை மீறி செயற்பட்டு வருகின்றமை முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சபாநாயகர் வேறு நாட்டு தூதுவர்களை சந்தித்து இலங்கை குறித்து தவறான கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சந்தர்ப்பங்களை சர்வதேச நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி நாட்டில் நிரந்தர குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

Related Post