சட்டரீதியான நடவடிக்கை மூலம் பெரும்பான்மையைப் பெறமுடியும் – ரவூப் ஹக்கீம்

சட்டரீதியிலான நடவடிக்கைகளின் ஊடாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தைகளினூடாக தீர்வொன்றை பெறமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உம்றா கடமைகளுக்காக புனித மக்கா நகரிற்கு புறப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வௌியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Related Post