இரவு பெய்த கனமழை கிளிநொச்சியின் பல பகுதிகள் வெள்ளத்தில்

கிளிநொச்சியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வீடுகளுக்குள்ளும் வெள்ளம் உட்புகுந்துள்ளது. இதனால் தற்காலிக வீடுகளில் வாழ்ந்தோர் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இதே வேளை கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் நேற்றைய தினம் காலையில் 19 அடி 6 அங்குலமாக இருந்த நீர் இன்று காலை 25 அடி 6 அங்குலத்தை தொட்டுள்ளது. மேலும் இதன் நீர் மட்டம் விரைவாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.இப் பிரதேசத்தில் ஒரே நாளில் 140மி.மீற்றர் மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சிறிய குளங்களாக உள்ள கிளிநொச்சிக்குளம் கனகாம்பிகைக்குளம் என்பன வான் பாய ஆரம்பித்துள்ளது

Related Post