கிளிநொச்சி நன்னீர் மீன்பிடி விவசாயிகள் பெரும் பாதிப்பில்-தீர்த்துவைக்க அரச அதிபர் நடவடிக்கை

இரணைமடுக் குளத்தின் உள்ளே நன்னீர் மீன்பிடி என்னும் பெயரில் மேற்கொண்ட செயலினால் ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாழடிக்கப்படும் நிலமைக்கு சென்றுள்ளதாக மாவட்டச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த திட்டத்தை உடனடியாக பெற்றுத்தருமாறு மாவட்டச் சுந்தரம் அருமைநாயகம் நீர்ப்பாசணத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரணைமடுக் குளத்தின் உட்புறத்தில் வலது கரைப் பக்கமாக நீர் வாய்க்காலின் அருகே நன்நீர் மீன் பிடித் திட்டத்தின் கீழ் ஓர் வாய்க கால் அமைக்கும் முதிய திட்டம் ஒன்று முன்னெடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டு ஓர் நிறுவனம் மூலம் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் விவசாயத்திற்கான நீர்ப்பாச்சும் பிரதான வாய்க்காலின் மிக அருகே 10 மீற்றர் இடைவெளியும் இன்றி அந்தப் பணி இடம்பெறுவதனால் மிகவிரைவில் பிரதான வாய்க்கால் முழுமையாக அழிவடையும் ஆபத்து உள்ளது.

இதேநேரம் குறித்த வாய்க்காலில் தேங்கிய மண் அனைத்தும் அகற்றப்பட்டு பாரிய நிதிச் செலவில் கடந்த ஆண்டே சீர் செய்யப்பட்ட குளத்தில் இவ்வாறு ஒருபக்க திட்டமிடலின் காரணமாக நன்நீர் மீன்பிடிக்காக அமைக்கப்படும் வாய்க்காலில் அகழப்படும் சேற்று மணல் பிரதான நீர்விநியோக வாய்க்காலினை அடைக்கின்றது. அதேநேரம் போதிய திட்டமிடலோ விவசாயிகளின் ஆலோசணையோ பெறப்படாமல் மேற்கொண்ட திட்டத்தில் குறைந்த பட்சம் நீர்ப்பாசணத் திணைக்களமேனும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தல் வேண்டும்.

இவை அனைத்தும் இன்றி மேற்கொண்ட ஓர் பணியால் பாரிய ஆபத்தே ஏற்படவுள்ளது. அதாவது குளத்திற்கு அதிக நீர் வரத்து ஏற்படும் பட்சத்தில் விவசாய நீர்ப்பாச்சல் வாய்க்காலே முழுமையாக அழிவடையும் நிலமையும் ஏற்படலாம் இதனால் பிரதான நீர் விநியோக வாய்க்காலை உடனடியாக சீர் செய்யமுடியுமா என நாம் ஆராய்ந்தபோதும் அதற்கான சாத்தியப்பாடுகளும் தென்படவில்லை. காரணம் தற்போது மழையும் ஆரம்பித்துவிட்டதோடு கனகரக வாகனங்களை கொண்டு செல்லும் மார்க்கத்தையும் குறித்த திட்டத்தை மேற்கொள்வோர் விட்டு வைக்கவில்லை.

எனவே இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் ஆராய்ந்து உடனடியாக சகல தரப்பு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்வதோடு வாய்க்காலை சீர் செய்வதற்கும் ஆவண செய்து தருமாறு இரணைமடு விவசாயிகள் சம்மேணச் செயலாளர் மாவட்டச் செயலாளருக்கு எழுத்தில் சமர்ப்பித்தார்.

இவைதொடர்பில் மாவட்ட நீர்ப்பாசணப் பொறியியலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த விடயம் தொடர்பில் உடனடியாகவே கவனம் செலுத்தப்படும் எனப் பதிலளித்திருந்தார். இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் ஆராய்ந்தபோது குறித்த பணியின் காரணமாக விவசாயப் பயன்பாட்டு வாய்க்காலிற்கு பாதிப்படையும் தன்மை உள்ளது எனவே குறித்த பணியை உடன்னியாக நிறுத்துமாறு பணித்துள்ளேன் என மாவட்டச் செயலாளர் பதிலளித்தார்

Related Post