வியாழேந்திரனை அபகரித்திருக்கக்கூடாது-ஜனாதிபதியிடம் நேரில் தெரிவித்த சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் எனக் கட்சி ரீதியான முடிவை இன்று கோரும் தாங்கள் அன்று கட்சியில் இருந்து வியாழேந்திரனை பிரித்து எடுத்து பிரதி அமைச்சர் ஆக்கியமை எம்மை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாறளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே மேற்படி கருத்தினை ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்த மட்டில் மகிந்த ராயபக்சாவினை ஆதரிக்க முடியாது என்பதனை நான் அறிவேன். அதனால் கூட்டமைப்பு நடு நிலமை வகிக்கும் முடிவினை எடுக்க வேண்டும். என ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

இதன்போது எமது நிலைப்பாடு தொடர்பில் நாம் பகிரங்கமாக அறிவித்து விட்டோம். அதனை மக்களும் அறிவார்கள் அந்த நிலையில் இனி மாற முடியாது. அதேநேரம் ஜனநாயகத்தை மதிக்காது நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கு முரணாக பிரதமர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றினை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும். என கோரிக்கை விடுத்தனர். நாடாளுமன்றம் 16ம் திகதி கூடும் என அறிவிக்கப்பட்டபோதிலும் 14ம் திகதி கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என ஜனாதிபதி பதிலளித்தார்.

அவ்வாறு இரு நாட்கள் என்பது ஜனநாயகம் அல்ல தற்போதும் உடனடியாக கூட்ட முடியும். இதேநேரம் இன்று கட்சி முடிவை எதிர்பார்க்கும் நிலையில் அன்று கட்சிக்கு தெரிவிக்காது வியாழேந்திரனை எடுத்து பிரதி அமைச்சராக்கியமை கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எனத் தெரிவித்த சமயம் வியாழேந்திரனை கட்சிக்குத் தெரியாது எடுத்தமை தவறுதான். ஆனால் பெரும்பான்மை தேவைப்பட்டோர் அழைத்து வந்தமையினால் இடம்பெற்றது. என ஜனாதிபதி பதிலளித்தார்.

இதேபோன்று தற்போது தங்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கும் நீங்கள் அன்மையில் நான் உயிரோடு இருக்கும் வரையில் சமஸ்டித் தீர்வோ அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை. எனத் தெரிவித்த நிலையில் எவ்வாறு தமிழ் மக்களின் நலனை எதிர்பார்க்க முடியும். எனவும் வினாவினர். குறித்த செய்தியானது எமது கட்சி அமைப்பாளர்கள் மத்தியில் நான் பேசியதாகவே வெளி வந்தது. ஆனால் உண்மையில் நான் அவ்வாறு உரையாற்றவே இல்லை. இதனால் குறித்த செய்தியை பிரசுரித்த ஊடக நிறுவனத்திடம் கோரியபோது செய்தி வழங்கியவரை தெரிவிக்க முடியாது. என்கின்றனர். என ஜனாதிபதி பதிலளித்தார்

Related Post