சர்கார் படம் குறித்து எச்.ராஜா ட்விட்டரில் விமர்சனம்

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று உலகமெங்கும் அதிகப்படியான திரையரங்களில் வெளியாகி இருக்கிறது. மேலும் வசூலில் தெறி, மெர்சல், காலா, பாகுபலி உள்ளிட்ட படங்களையும் தாண்டி அதிகமாக வசூலித்தாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா’ என்று சர்கார் படம் குறித்து சூசகமாக விமர்சனம் செய்துள்ளார். இவருடைய இந்த பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Post