புத்தரின் படத்துடன் சாறியணிந்த இளம்பெண்ணால் யாழில் பரபரப்பு

புத்தரின் உருவப்படம் பொறித்த சேலையணிந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்ய முற்பட்ட போது பரபரப்பு ஏற்பட்டது.

யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளில் முன்னிலையாகுவதற்கு இளம் சட்டத்தரணியொருவர் இன்று காலை நீதிமன்ற வளாகத்தினுள் வந்திருந்தார் அவரது சேலையில் புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது இதை அவதானித்த நீதிமன்ற பொலிசார் யாழ் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த பொலிஸ் அணியொன்று அந்த இளம் பெண் சட்டத்தரணியை கைது செய்ய முற்பட்டது இதனால் நீதிமன்றத்தில் பரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

உடனடியாக சட்டத்தரணிகள் தலையிட்டு அவரை கைது செய்ய முடியாதென தெரிவித்த போதும் பொலிசார் விடாப்பிடியாக நின்று குறித்த பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று வாக்கு மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

Related Post