நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் லெப்டினென்ட் கொமாண்டர் சந்தன ப்ரஸாத் ஹெட்டியாராய்ச்சியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சந்தேகநபரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் 2008ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் நேவி சம்பத் என அழைக்கப்படும் சந்தன பி ஹெட்டியாராச்சி கடந்த மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Post