வவுனியாவில் திடீர் சுற்றிவளைப்பு! பலர் கைது

வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவின், வைரவப்புளியங்குளத்தில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 20 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய நேற்று மதியம் இரண்டு மணி தொடக்கம் மாலை ஆறு மணி வரையில் இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையினை வவுனியா மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான 8இற்கு மேற்பட்ட போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Post