பெண்கள் விரும்பும் டாட்டூ சின்னங்களும் அதன் அர்த்தங்களும்…

SHARE THIS NEWS please, THANK YOU
............................

பெண்கள் விரும்பும் டாட்டூ சின்னங்களும் அதன் அர்த்தங்களும்…

உடலில் நிரந்தரமாக பதித்துக்கொள்ளும் டாட்டூஸ் சின்னங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் இருக்கிறது. அதனால் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ற சின்னங்களை பதிவு செய்யவேண்டும்.

பெண்கள் விரும்பும் டாட்டூ சின்னங்களும் அதன் அர்த்தங்களும்…
பெண்கள் விரும்பும் டாட்டூ சின்னங்களும் அதன் அர்த்தங்களும்…

பெண்கள் விரும்பும் டாட்டூ சின்னங்களும் அதன் அர்த்தங்களும்…
உடலில் நிரந்தரமாக பதித்துக்கொள்ளும் டாட்டூஸ் சின்னங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான அர்த்தம் இருக்கிறது. அதனால் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ற சின்னங்களை பதிவு செய்யவேண்டும். ‘டாட்டூஸ்’ சின்னங்கள் உணர்த்தும் அர்த்தங்கள்!

MT4 Platforms

செமிகோலன்: ‘என் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி எதுவும் கிடையாது. எத்தனை நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை எல்லாம் கடந்து நான் வாழ்வேன்’ என்பதை ‘செமிகோலன்’ சின்னம் குறிப்பிடுகிறது. மிகப் பெரிய கஷ்டங்களில் இருந்து விடுபட்டவர்களும், தற்கொலை முயற்சிகளில் இருந்து மீண்டவர்களும் இந்த டாட்டூ சின்னத்தை பொறித்துக்கொள்கிறார்கள்.

தாமரை: இந்த மலரை பொறித்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தாமரை தண்ணீருக்கு மேல் பூத்திருக்கும். அடி ஆழம் வரை தண்டினை வளர்த்து நிலைத்து நிற்கும். சேற்றில் கூட செந்தாமரை மலர்ந்து நிற்கும். அதனால் பல விஷயங்களில் தான் தன்னிகரற்றவர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறவர்கள், இதனை பொறித்துக்கொள்கிறார்கள்.

ஆங்கர்: ‘எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் நான் அசையமாட்டேன். மற்றவர்களைகூட பிடித்து இழுத்து வசீகரித்து என்னோடு தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றல் எனக்கு இருக்கிறது’ என்பதை காட்டுவது இந்த ‘நங்கூரம்’ சின்னம். இது பலத்தின் அடையாளம்.

யிங்-யாங்: இது சீனத் தத்துவத்தை பிரதி பலிக்கும் சின்னம். வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழ்பவர்கள் இந்த சின்னத்தை வரைந்து கொள்கிறார்கள். ‘உலக வாழ்க்கை நன்மையும், தீமையும் கலந்தது. எல்லா நன்மையிலும் தீமை கலந்திருக்கும். அதுபோல் எல்லா தீமையிலும் நன்மையும் கலந்திருக்கும்’ என்ற தத்துவத்தை இந்த சின்னம் உணர்த்துகிறது.

டிராகன்: இது இரண்டுவிதமான அர்த்தங்களை கொண்டிருக்கிறது. வேகம், எதிர்பார்ப்பு, ஆற்றல் போன்ற நேர்மறை சக்தியின் வெளிப்பாடாகவும், மற்றவர்களை மிரள வைத்து பயம் கொள்ளச் செய்தல், பொறாமை போன்ற எதிர்மறை சக்திகளின் வெளிப்பாடாகவும் இதில் உள்ளது.

சிறகு: சுதந்திரத்தை உணர்த்துகிறது. இவர்கள் அதிக சுதந்திரத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனந்தமாக வாழ விரும்புவார்கள்.

சூரியன்: பரந்த ஆற்றல், புதுமையான செயல்பாடு, தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.

இவைகளைத் தவிர வேறு பலவிதமான சின்னங்களையும் பொறித்துக்கொள்கிறார்கள். டாட்டூவில் ஒருவர் பொறித்திருக்கும் சின்னத்தை வைத்து அவரது குணாதிசயத்தையும் ஓரளவு கணித்துவிட முடியும்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.