முல்லைத்தீவு – வட்டுவாகலில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் பாரியளவான மீன்கள்

முல்லைத்தீவு – வட்டுவாகல் ஆற்றில் பெருந்தொகையான மீன்கள் உயிரிழந்து காணப்படுகின்றது.

வடக்கில் முல்லைத்தீவு உள்ளிட்ட பல இடங்களில் நிலவுகின்ற கடும் வறட்சி காரணமாக நீர் வெப்பமடைந்து இந்த மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆற்றுப்பகுதியில் நீர் வற்றி காணப்படுவதுடன், மீன்கள் கொத்து கொத்தாக மடிந்து கரையொதுங்கிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

மேலும், மீன்கள் இறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும், அப்பகுதியில் செல்வோர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள்

Related Post