மகனை தூக்கிலிடுமாறு நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி விட்டு துறவரம் பூண்ட தாய்

மாணவியை கொலை செய்த தனது மகனை தூக்கிலிடுவதை தான் எதிர்க்கவில்லை எனக் கூறி நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துள்ள பெண்ணொருவர் பௌத்த பிக்குனியாக துறவரம் பூண்டுள்ளார்.

ஆர்.கே.குசுமாவதி என்ற இந்த பெண், கிரியால, பளுகொல்ல குண்டகல பிக்குகள் ஆராண்யத்தில் ராஜாங்கனயே தம்மதின்னா என்ற பெயரில் நேற்று துறவரம் பூண்டுள்ளார்.

கிரிபாவ பொலிஸ் பிரிவின் சாலிய அசோகபுல யாய 2 என்ற பகுதியில் வசித்து வந்த 17 வயதான மதுஷானி என்ற மாணவியை கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் தாயே இவ்வாறு துறவரம் பூண்டுள்ளார்.

துறவரம் பூண தனக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த மதுஷானியின் வீட்டுக்குச் சென்று, அந்த மகளுக்கு புண்ணிய ஏற்கை பிரார்த்தனை செய்து, தர்ம உபதேசம் செய்வதே தனது பெரிய எதிர்பார்ப்பு எனவும் ராஜாங்கனயே தம்மதின்னா பிக்குனி தெரிவித்துள்ளார்.

துன்ப துயரங்கள் நிறைந்த இந்த வாழ்வில் இருந்து விடுபடும் திடசங்கற்பத்துடன் மீதமுள்ள காலத்தை தியானத்தில் கழிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மதுஷானியின் துயரமான மரணமே தன்னை சாதாரண வாழ்க்கையை கைவிட்டு துறவரம் பூண காரணமாக அமைந்தது எனவும், இந்த மரணம் தனக்கு வாழ்க்கை தொடர்பில் பெரிய வெறுப்பை ஏற்படுத்தியது எனவும் ராஜாங்கனயே தம்மதின்னா பிக்குனி குறிப்பிட்டுள்ளார். கடவத்தை தம்மவீர தேரர் தனது ஆன்மீக குரு எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Post