வாகரை காணி சுவீகரிப்பு; விரைவில் நடவடிக்கை – வியாழேந்திரன் உறுதி

மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்தில் காணிகள் சுவீகரிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள் குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உறுதியளித்துள்ளார்.

வாகரை பிரதேசத்திற்கு நேரடியாக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதேச மக்களுடன் நேரடியாக கலந்துரையாடிய போது இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு – மாங்கேணி கிராமத்தில் வெள்ள நீர் வழிந்தோடும் கால்வாய் பகுதியை தமக்குரியது என தெரிவித்துள்ள சிலர் அதனை மறித்துள்ளதால் நீர் வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் பிரதேச மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமது பகுதிகளில் உள்ள அரச காணிகள் மாற்று இனத்தவர்களுக்கு தாரைவார்க்கும் செயற்பாடுகளை பிரதேச செயலகத்தில் உள்ளவர்கள் மேற்கொள்வதாகவும் இதன் போது பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Post